×

பாலியல் தொழிலில் புதிய யுக்தி சென்னையில் புற்றீசல்போல முளைக்கும் மசாஜ் சென்டர்கள்: ‘ஹேப்பி எண்டிங்’- சங்கேத மொழியில் பணம் பிடுங்கும் கும்பல்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக புற்றீசல்கள்போல  மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.  அவற்றை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  சென்னை நகரில் நூற்றுக்கு 90 பேரின் செல்போன்களுக்கு தினமும் 10 முதல் 20, 25 மசாஜ் குறித்த எஸ்எம்எஸ்கள்  வருகின்றன. அதில் மசாஜ் நடத்தப்படும் இடம், முகவரி எதுவுமே இருக்காது. ஆனால் தொடர்பு கொள்வதற்காக செல்போன் எண் மட்டுமே இருக்கும். இந்த செல்போன் எண் ஒரு வாரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மசாஜ் சென்டர் நடத்துபவர்கள், வாரத்துக்கு ஒரு செல்போன் எண்ணை மாற்றி விடுகின்றனர்.

குறிப்பாக இளைஞர்களை குறி வைத்தே குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. எஸ்எம்எஸ்சில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், முழுமையான முகவரி தெரிவிப்பதில்லை. மசாஜ் நடத்தப்படும் இடத்தின்  அருகே உள்ள ஒரு இடத்தை குறிப்பிடுவார்கள். அங்கு சென்று, தான் வந்திருப்பதாக தெரிவித்தால், அதை உறுதி செய்து கொண்ட பின்னர், முகவரியை தெரிவிப்பார்கள். எஸ்எம்எஸ்சில் 699 முதல் 4000 வரை மசாஜ்  செய்யப்படும் என்று கூறுவார்கள்.   ஆனால் மசாஜ் சென்டருக்கு சென்றவுடன் குறைந்தது 1500 என்று தெரிவிப்பார்கள். அதில் 1500க்கு வெறும் ஆயில் அல்லது பவுடர் மசாஜ் என்று தெரிவிப்பார்கள். மசாஜின்போது கண்டிப்பாக  விபசாரம் கிடையாது என்பதை தெரிவிப்பார்கள்.

ஆனால் 30 நிமிடம் மட்டுமே மசாஜ் நடைபெறும் என்பார்கள். ஆனால், ஒரு மணி நேரம் மசாஜ்க்கு 2000 வசூலிக்கப்படும். மசாஜ் செய்யும் பெண்கள் மீது நீங்கள் கை வைத்துக் கொள்ளலாம். எந்த தவறும் பண்ணக்கூடாது என்று  எச்சரிப்பார்கள். 3000, 4000 என்றால் ஒரு மணி நேரத்துக்கு 2 பெண்கள் மசாஜ் செய்வார்கள். ஒரே நேரத்திலும் மசாஜ் செய்யலாம். அல்லது ஒரு பெண் 30 நிமிடம் என்று வீதத்திலும் மசாஜ் செய்யலாம் என்பார்கள். அதில் 3000,  4000 ஆயிரத்துக்கு சாண்ட்விஜ் மசாஜ் என்பார்கள்.ஆண் உள்ளாடை அணிந்திருப்பார். பெண், எந்த ஆடையுமே அணியமாட்டார். அவர் ஆண்களுக்கு மசாஜ் செய்வார். இதனால் மசாஜ்க்கு செல்லும் ஆண்கள் 3 ஆயிரம் அல்லது 4  ஆயிரம் பணத்தை கட்டி விட்டு ஆசையுடன் உள்ளே செல்கின்றனர். இருட்டு அறையில் ஒரு மேஜை மட்டுமே இருக்கும். அதில் மெத்தையும் போடப்பட்டிருக்கும். ஒரு சிறிய விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும். முன்னதாக  வேலை செய்யும் பெண்கள் வரிசையாக வந்து நிற்பார்கள்.

அவர்களில் நமக்கு யார் மசாஜ் செய்யவேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யலாம் என்றும் ஆசை வார்த்தை காட்டுவார்கள். பின்னர் நாம் தேர்வு செய்யும் பெண் அல்லது பெண்கள் மசாஜ் செய்வார்கள். அப்போது ஆண்களின்  உணர்ச்சிகளை தூண்டி விட்டு அவர்களுக்கு உண்மையான மசாஜ் செய்யாமல், ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.  பின்னர் மசாஜ் செய்யும் பெண்கள், வந்திருப்பவர் வசதியானவர் அல்லது அவரிடம் பணம் இருப்பது தெரிந்தால், மசாஜ்  முடிந்து விட்டது. வேண்டும் என்றால் ஹேப்பி எண்டிங் பண்ணலாம். அதற்காக நீங்கள் பெண்களுக்கு தனியாக குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல், அதற்கு மேல் நீங்கள் விரும்பும் பணத்தை கொடுக்கலாம் என்று கூறுவார்கள்.  மெசேஜில் முதுகு தண்டு வலிக்கான மசாஜ், முதுகு வலி, இடுப்பு வலிக்கான சிறப்பு மசாஜ் என்று கூறுவார்கள். ஆனால், எந்த பயிற்சியும் பெறாத, மசாஜ் பற்றியே தெரியாத பெண்கள்தான் இந்த தொழிலில்  ஈடுபடுத்தப்படுகின்றனர். அதைத் தவிர மூலிகை எண்ணெய் என்று கூறி வெறும் தேங்காய் எண்ணெயை மட்டும் பூசிவிட்டு ஏமாற்றுவதாகவும் புகார்கள் உள்ளன.

சென்னையில் தற்போது வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட இளைஞர்கள், பட்டதாரிகள் அதிகமாக தங்கி உள்ளனர். அவர்களை குறி வைத்தே இந்த மசாஜ் சென்டர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் 100க்கும்  மேற்பட்ட இடங்களில் இந்த மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2 அல்லது 3 மாதம்தான் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். அதன்பின்னர் வேறு இடங்களுக்கு மாற்றி விடுகின்றனர். மேலும், விபசார  தொழிலில் கொடி கட்டிப் பறந்து வரும் தனசேகர் உள்ளிட்ட சில குற்றவாளிகளும் இந்த மசாஜ் சென்டர் தொழிலை தொடங்கி, விபசாரம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உள்ளூர் மற்றும் சிறப்பு போலீசாரும்  உடந்தை என்றும் கூறப்படுகிறது. இதனால் இளைஞர்கள், பட்டதாரிகள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை இதுபோன்ற தொழில் நடத்துபவர்களிடம் இழந்து, தங்களுக்கும், குடும்பத்துக்கும் செலவு செய்ய முடியாமல் தவித்து  வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சூதாட்டம் போன்று இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Money Grabbing Gang , Sex Industry, Chennai, Housewife, Happy Ending,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...